×

பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: கூட்டுறவு இணை பதிவாளர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி அளிக்கப்படுகிறது என்று மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் தெரிவித்துள்ளார். மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் பேருந்து அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 7 பாடங்கள் கொண்ட பழைய பாடத்திட்டத்தின்படி, 2002-2021ம் ஆண்டு வரை முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நடைபெற்று வந்தது.

இந்த, மேலாண்மை நிலையத்தில் 2022ம் ஆண்டு முதல் 20 பாடங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தின்படி, இரண்டு பருவ முறைகளாக பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. பழைய பாடத்திட்டம் துவக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. தற்போது, புதிய பாடத்திட்டம் துவங்கிய 2 ஆண்டுகள் முடிவடைந்தாலும் பழைய பாடத்திட்டங்களை எதிர்வரும் ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பழைய பாடத்திட்டத்தின்படி தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கான துணை தேர்வு எதிர்வரும் ஓராண்டுக்குள் நடத்தப்படும் எனவும்,

மேற்படி காலத்திற்குள் துணை தேர்வில் கலந்து கொள்ளாத பயிற்சியாளர்கள் புதிய பாடத்திட்டத்தின்படி முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் நம்பர்-5ஏ வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்- 631501 என்ற முகவரியில் நேரில் அல்லது தொலைபேசி எண் மூலம் 044 – 2723 7699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: கூட்டுறவு இணை பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram Cooperative Management Center ,Regional Cooperative Joint Registrar ,Jayashree ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...